‘டாக்டர்’ படம் கொரோனா சூழலில் நமக்கு சிரிப்பு மருந்தைக் கொடுத்துள்ளது: ஷங்கர்

0
52

‘டாக்டர்’ படம் கொரோனா சூழலில் நமக்கு சிரிப்பு மருந்தைக் கொடுத்துள்ளது: ஷங்கர்

சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடையும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு,தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடுவதோடு திரை பிரபலங்களும் ‘டாக்டர்‘ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “டாக்டர் இந்த கொரோனா சூழலில் நமக்கு சிரிப்பு மருந்தைக் கொடுத்துள்ளது. அனைவரையும் சிரிக்கவைத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு வாழ்த்துகள். இந்த குடும்ப பொழுதுபோக்கு படத்தைக் கொடுத்ததற்காக சிவகார்த்திகேயன், அனிருத் உள்ளிட்ட மொத்தப் படக்குழுவிற்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.