டாக்டர் படத்தின் ‘செல்லம்மா’ பாடல் முன்னோட்டம்!

0
6

டாக்டர் படத்தின் ‘செல்லம்மா’ பாடல் முன்னோட்டம்!

செல்லம்மா பாடல்செல்லம்மா பாடல் இந்த படத்தின் மூலம் பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

டாக்டர் படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கடைசியாக ‘ஹீரோ’ படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது ’டாக்டர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இதில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் இதனை தயாரித்துள்ளது.

அதோடு டாக்டர் படத்தில் வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, இளவராசு, மிலிந்த் சோமன், அருண் அலெக்சாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத் ரவிச்சந்தர்.

இந்த படத்தின் மூலம் பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள ஆறாவது படமான இதன் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது ‘செல்லம்மா செல்லம்மா’ பாடலின் முன்னேட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் ஏற்கனவே மேக்கிங் பாடலாக வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து அக்டோபர் 9-ம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.