டாக்டர் சினிமா விமர்சனம்

0
68

டாக்டர் சினிமா விமர்சனம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு, வினய், மிலிந்த் சோமன்;.
ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்
இசை: அனிருத்.
இயக்கம்: நெல்சன் திலீப் குமார்.

எதையும் பிராக்டிக்கலாக பார்க்கக்கூடிய டாக்டர் வருண் (சிவகார்த்திகேயன்) ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிகிறார். எமோஷனல் எதிர்பார்ப்பவர் பத்மினியை (ப்ரியங்கா மோகன்). டாக்டர் வருண் பத்மினியை திருமண நிகழ்வில் சந்திக்கிறார், காதல் மலர்கிறது. தொடர்ந்து அவரை திருணம் செய்துகொள்ள ஆயத்தமாகிறார். அனைத்து விஷயத்திலும் நேர்த்தியாக இருக்கும் டாக்டர் வருணை பத்மினிக்கு தீடீர்; என்று பிடிக்காமல் போக காதல் கைகூடாமல் கல்யாணத்துக்கு முன்பே பிரேக் அப் ஆகிவிடுகிறது. இந்நிலையில் பத்மினியின் அண்ணியாக வரும் அர்ச்சனாவின் குழந்தை கடத்தப்படுகிறார். விஷயம் அறிந்து உதவிக்கு வரலாமா என மீண்டும் இணைந்து கடத்தல் கும்பலை தேடுகிறார். சிறுமியை கடத்தியது யார்? கடத்தல் கும்பல் யார்? டாக்டர் வருண் எப்படி உதவுகிறார்? என்பதுதான் டாக்டர் படத்தின் மீதிகதை.

காமெடி ஹீரோவாக தொடங்கி ஆக்சன் ஹீரோவாக தன்னை மாற்றி கொண்டு வரும் சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான நடிப்பு பாணியில் இருந்து விலகி வேறொரு கோணத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன் கேரியரில் இது பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்.
அழகாக வந்து அனைவரையும் கவரும் விதமாக இருக்கிறது நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், நல்ல அறிமுகத்தை கொடுத்து இருக்கிறார்.இளைஞர்களின் டார்லிங்காக கண்டிப்பாக அவர் வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

அழகான அமைதியான வில்லன் சைலன்ட் கில்லர் வினய், குறைவான காட்சிகள் என்றாலும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.
அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு, ஆகியோர் அற்பதமான குணசித்திர நடிப்பை வெளிப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். தீபா காமெடியில் அசத்தியுள்ளார். ஆல்வினாக ரகுராமும், மெல்வினாக ராஜீவ் லட்சுமணனும், மிலிந்த் சோமனும் படத்தின் வெற்றிக்கு மிகச்சிறந்த அளவில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

இரண்டரை மணிநேரம் சிரிப்புக்கு யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, சுனில் ஆகியோர் காரண்டி. திரையங்கில் கைதட்டி படத்தை பார்க்கும் அளவிற்கு கலக்கியிருக்கிறார்கள்.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்படும்.

அனிருத் பின்னணி இசையில் தெறிக்க விடுகிறார். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் சேர்க்கிறது. செல்லம்மா பாடல் ரசிக்க வைக்கிறது.
நிர்மலின் படத்தொகுப்பு கச்சிதம்.

கோலமாவு கோகிலா படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் படம் இது. காமெடி, ஆக்ஷனை தொடர்ந்து டாக்டர் படத்தில் வேறொரு சிவகார்த்திகேயனை காட்ட உழைத்துள்ளார் இயக்குனர். வழக்கமான கடத்தல் கதை போல் இல்லாமல், விறுவிறுப்பு சற்றும் குறையாமல் திரைக்கதை அமைத்து கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

மொத்தத்தில் கொரோனா ஊரடங்கால் வெகு நாட்களாக குடும்பத்துடன் படம் பார்க்க தவறியவர்களை தியேட்டருக்கு வரவழைத்து சிரிப்பு என்னும் மருந்தை கொடுத்து ரசிக்க வைத்து விடுகிறது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோடப்பாடி ஜே.ராஜேஷின் டாக்டர்.