டப்பிங் யூனியனுக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை

0
173

டப்பிங் யூனியனுக்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை

கவிஞர் வைரமுத்துவைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதால் டப்பிங் யூனியனிலிருந்து நீக்கப்பட்டிருந்த பாடகி சின்மயிக்கு ஆதரவாக சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டப்பிங் பேசவரும் பெண்களிடம் அந்த யூனியனின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ராதாரவி தவறாக நடந்துகொள்கிறார் என்பதில் துவங்கி அவருக்கு மலேசியாவில் வழங்கப்பட்ட டத்தோ பட்டம் போலியானது என்பது வரை விடாமல் அவரிடம் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தார். அதனால் டப்பிங் யூனியனிலிருந்து அவரைத்தூக்கி அடித்த ராதாரவி அவரை அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் ஆக்கினார்.

அவ்வாறு நீக்கப்பட்டதால் பாடகி சின்மயி தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீ டூ புகார் கூறிய சின்மயி தன்னை வேண்டுமென்றே பழிவாங்கிவிட்டதாக குற்றம் சாட்டி வந்தார்.

இது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவருக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.

இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சின்மயி,’ மிக நீண்ட சட்டப்போராட்டத்துக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்துள்ளது. டப்பிங் யூனியனில் நான் பணியாற்ற இடைக்கால உத்தரவு வந்திருக்கிறது. இந்த நீதி நீடிக்கும் என நம்புகிறேன். நீதிமன்றத்துக்கு நன்றி’ என்று பதிவிட்டிருக்கிறார்.

ஆனால் ராதாரவி மனசு வைக்காமல் சின்மயி டப்பிங் பேச முடியாது என்பதே சினிமா எதார்த்தம்.