டகால்டி திரை விமர்சனம்

0

டகால்டி திரை விமர்சனம்

ரேட்டிங்

கதை:
குரு (சந்தானம்) மும்பையில் சின்னச்சின்ன டகால்டி வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வருகின்றார். அவரது நண்பர் யோகி பாபு, மும்பையில் பிக்பாக்கெட் அடிப்பவர். அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் சாம்ராட் (தருண் அரோரா) மிகப் பெரிய பணக்காரன். தன் கம்ப்யூட்டரில் கற்பனையாக ஒரு பெண்ணின் படத்தை வரைந்து, அந்த பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் பல கோடி ரூபாய் செலவு செய்து கொண்டு வந்து தன் ஆசையை தீற்றுக்கொள்பவர். அப்படி கற்பனையில் வரையப்பட்ட பெண் தான் ரித்திகாசென். இந்த பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் கொண்டு வந்து தன்னிடம் சேர்க்க வெண்டும் என்று உத்தரவு போடுகிறார் சாம்ராட் (தருண் அரோரா). இந்தியா முழுவதும் பலரும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போது, அந்த அசைன்மென்ட் மும்பையில் போதைப் பொருள் கடத்தும் டான்-ஆக இருக்கும் ராதாரவிக்கும் கிடைக்கிறது. அதே நேரத்தில் ராதாரவியிடம் சந்தானம் தொழில் ரீதியாக மாட்டிக்கொள்ள, அவரை கொல்ல ராதாரவி உத்தரவிடுகின்றார். சந்தானம் உடனே அந்த வீட்டில் இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, இந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு வாரத்தில் அந்த பெண்னை ஒப்படைக்கிறேன் என்று ராதாரவியிடம் கூறி அங்கு இருந்து எஸ்கேப் ஆகிறார் சந்தானம். குரு (சந்தானம்) கற்பனையில் வரையப்பட்ட பெண்ணைத் (ரித்திகாசென்) தேடிச் செல்கிறான். அந்தப் பெண் திருச்செந்தூரில் இருப்பது தெரியவர, அந்த பெண்னை சந்திக்க திருச்செந்தூர் செல்கிறான் குரு. ரித்திகாசென்னை குரு (சந்தானம்) கண்டுபிடித்து தான் சொன்னது போல் வில்லன்களிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் ஒட்டுமொத்த படத்தையும் அவரே தாங்கி கொண்டு செல்கின்றார். டைமிங் காமெடி, ஒன் லைன் காமெடியென தனக்கே உரிய பாணியில் நடித்து தூள் கிளப்பி இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக யோகிபாபுவின் காமெடியும் பெரியளவிற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சென், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

கிளைமேக்ஸ் சில காட்சிகளில் வரும் பிரம்மானந்தம் கலகலப்பூட்டுகிறார்.
வில்லனாக வரும் தருண் அரோரா ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து மிரட்ட முயற்சித்துள்ளார்.

ராதாரவி, சந்தானபாரதி, ரேகா, மனோபாலா, நமோ நாராயணா ஆகியோரும் படத்தில் வீணடிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவ்வளவு தான், இவர்களின் திறமையை சரியாக பயன் படுத்த தவறிவிட்டவர் யார்? சந்தானமா? இயக்குனர் விஜய் ஆனந்தா?

ஸ்டண்ட் சில்வா சண்டை, தீபக்குமாரின் ஒளிப்பதிவு மற்றும் விஜய் நரேனின் இசையும், பின்னணி இசையையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகி இயக்கியவர் திரைக்கதையில் தடுமாறியது ஏனோ?

மொத்தத்தில் ஹேண்ட் மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரி தமது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள ‘டகால்டி” பார்க்கலாம் டைம்பாஸ் பண்ணலாம்.

நம்ம பார்வையில் ‘டகால்டி” படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.