ஜோதிகாவின் 50-வது திரைப்படம் உடன்பிறப்பே: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகாவின் 50-வது திரைப்படம் உடன்பிறப்பே: ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை அடுத்து ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நல்ல கதையம்சத்துடன் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டும் கவனமாக தேர்வு செய்து நடித்துவரும் ஜோதிகா, சகோதரன் – சகோதரிக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்ட ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவரது சகோதரராக சசிகுமார் நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ’கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார்.