‘ஜெய் பீம்’ படம் பார்த்து என் கண்கள் குளமானது – கமல்ஹாசன் நெகிழ்ச்சி

0
195

‘ஜெய் பீம்’ படம் பார்த்து என் கண்கள் குளமானது – கமல்ஹாசன் நெகிழ்ச்சி

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி நேற்று இரவு வெளியான படம் ‘ஜெய்பீம்’. நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் (Jai Bhim) திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இருளர் பழங்குடி மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்தவகையில், ஜெய் பீம் படக்குழுவினரை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.