ஜாங்கோ விமர்சனம்: வித்தியாசமான படைப்பு

0
88

ஜாங்கோ விமர்சனம்: வித்தியாசமான படைப்பு

மிருணாளினி ரவியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் நரம்பியல் நிபுணர் சதீஷ்குமார். மாமியாரின் கெடுபிடியால் சதீஷ்குமாரை விட்டு பிரிந்து செல்கிறார் மிருணாளினி. மனைவியிடம் சமரசம் செய்ய முயற்சிக்கும் சதீஷ்குமாருக்கு தோல்வியே மிஞ்சுகிறது. இந்த சமயத்தில் விண்கல் ஒன்று பூமியில் விழுகிறது, அந்த இடத்தில் இருக்கும் சதீஷ்குமார் டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். ஒரே நாள் சம்பவங்கள் திரும்பி திரும்பி நடக்க சதீஷ்குமார் குழப்பமாகிறார். இந்த நேர வளையத்திங்குள் மாட்டிய பிறகு மிருணாளினிக்கு ஆபத்து ஏற்படுவதை பார்க்கிறார். அதிலிருந்து மனைவியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றதா? என்பதே க்ளைமேக்ஸ்.

அறிமுக நடிகர் சதீஷ்குமார் மற்றும் டிக்டாக் புகழ் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அனிதா சம்பத், ஹரீஷ் பேரடி, வேலு பிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக் மற்றும் டேனியல் அன் போப் ஆகியோர் கதைக்கேற்ற கதாபாத்திரங்களாக மிளிர்கிறார்கள்.

ஒளிப்பதிவு -கார்த்திக் கே தில்லை, இசை- ஜிப்ரான், படத்தொகுப்பு- சான் லோகேஷ் ஆகிய மூவரின் பங்களிப்பு படத்திற்கு பலம்.

பூமியிலிருந்து ஜாங்கோ என்ற கருவியை பயன்படுத்தி விண்ணிலிருந்து வந்த வேற்றுகிரகவாசிகளின் விண்கலங்களை அழித்து மீண்டும் விண்ணிற்கே அனுப்புவது, இன்னோரு மருத்துவ விஞ்ஞானி செயற்கை இதயத்தை பொருத்தி ஆராய்ச்சி செய்வதற்காக பலபேரை பலிகாடாக்குவதும், மனைவியை காப்பாற்ற போராடும் கணவன் என்று கதைக்குள் கதையாக பல கிளைகளில் கதை பயணித்து ஒரே நாளில் சிக்கித்தவித்து அனைத்திற்கும் பிரியா விடை கொடுக்க எடுக்கும் முயற்சிகள் பல கோணங்களில் பயணித்து இறுதியில் பல தடுமாற்றங்களுடன் படத்தை முடிக்க இயக்குனர் மனோ கார்த்திகேயன் படாதபாடு படுவது நன்றாக தெரிகிறது. இந்த டைம் லூப்பின் முரண்பாடுகளால் நாமே மாட்டிக் கொண்டு முழிப்பது போல் ஆகி விட்டது தான் சோகம்.

மொத்தத்தில் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து தயாரித்திருக்கும் ஜாங்கோ வித்தியாசமான படைப்பிற்காக ஒரு முறை பார்க்கலாம்.