ஜனகராஜ் நடிக்கும் குறும்படம் ‘தாத்தா’

0
153

ஜனகராஜ் நடிக்கும் குறும்படம் ‘தாத்தா’

இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் சாக்லேட், கொலை விளையும் நிலம் ஆகிய படைப்புகளை உருவாககியதற்குப் பிறகு அடுத்த படைப்பாக மூத்த நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் நடித்த ‘தாத்தா என்ற குறும்படம் உருவாக்கியுள்ளது. நரேஷ் இயக்கத்தில் வினோத் ஒளிப்பதிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகள் ஆமினா ரஃபீக் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.

இப்படத்தில் ரேவதி பாட்டி, ரிஷி, கயல் தேவராஜ், முருகன் மந்திரம், பிரபாகர், ஷ்யாம், தீபா பாஸ்கர், ஆகியோர் நடித்து உள்ளனர். 16 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் விரைவில் ஸார்ட் பிலிக்ஸ் வலையொளி தளத்தில் வெளியாக உள்ளதென தயாரிப்பாளரும் பத்திரிக்கையாளருமான எஸ்.கவிதா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘தாத்தா குறும்படத்தின் டீசரை நடிகர் சூரி அவர்கள் தனது x தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு இந்த நேரத்தில் அன்பின் பெரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”. என்றார்.