ஜடா திரை விமர்சனம்

0

ஜடா திரை விமர்சனம்

தி பொயட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஜடா படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குமரன்.

கதிர், ரோஷினி ஜெயபிரகாஷ், ஏ.பி.ஸ்ரீதர், யோகிபாபு, கிஷோர், கௌதம் செல்வராஜ், அருண் அலெக்சாண்டர், லிஜிஷ், ராஜ்குமார், அருண் பிரசாத், நிஷாந்த், ஷண்முகம், ஸ்வஸ்திஸ்தா, அருவி பாலா, ராஜ், குலோத்துங்கன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-சாம்.சி.எஸ், ஒளிப்பதிவு-ஏ.ஆர்.சூர்யா, எடிட்டர்-ரிச்சர்ட் கெவின்.ஏ, கலை-ஸ்ரீகாந்த் கோபால், சண்டை-விமல் ராம்போ, ஒலி-சின்க் சினிமாஸ், மக்கள் தொடர்பு – குணா.

வடசென்னையில் சிறந்த கால்பந்தாட்ட வீரரான கதிர் பயிற்சியாளர் அருண் அலெக்சாண்டர் தடுத்தும் செவன்ஸ் என்ற விதிகளலற்ற கால்பந்தாட்ட விளையாட செல்கிறார். அதற்கு காரணம் பத்தாண்டுகளுக்கு முன்பு தனக்கு பயிற்சி கொடுத்து ஊக்கப்படுத்தி அதில் சாதிக்க முடியாமல் பழிவாங்கப்பட்டு இறந்த பயிற்சியாளர் கிஷோரின் கனவை நனவாக்க துடிக்கிறார்.சென்னையில் போலீசின் கெடுபிடியால் அரையிறுதியும், இறுதிப்போட்டியும் சாத்தான்குளத்தில் நடக்கிறது. அங்கே செல்லும் கதிரும், நண்பர்களும் ஆமானுஷ்ய சக்தியால் பயமுறுத்தப்படுகிறார்கள். இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றார்களா? பயமுறுத்துபவர்கள் யார்? கொலை செய்யப்பட்டவர்கள் யார்? பின்னணி என்ன? கதிர் கிஷோர் குடும்பத்தை கொலை செய்தவரை பழி வாங்கினாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
கதிர் கால்பந்தாட்ட வீரருக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஒவியக் கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர் முதன் முதலாக வடசென்னை வில்லனாக களமிறங்கி பார்வையாலேயே மிரட்டுகிறார்.

அருண் அலெக்சாண்டர் கைதி படத்திற்கு பிறகு நல்லதொரு முக்கியமான கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக களமிறங்கியிருக்கிறார். இவர் மிடுக்கான, கண்டிப்பான கோச்சாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். இனி வரும் படங்களில் கேரக்டர் ரோல்களில் எதிர்பார்க்கலாம்.

கிஷோரின் ப்ளாஷ்பேக்கைச் சுற்றித் தான் படத்தின் முழு கதையும் பயணிக்கிறது. ரோஷினி ஜெயபிரகாஷ்,  யோகிபாபு, கௌதம் செல்வராஜ், லிஜிஷ், ராஜ்குமார், அருண் பிரசாத், நிஷாந்த், ஷண்முகம், ஸ்வாதிஸ்தா, அருவி பாலா, ராஜ், குலோத்துங்கன் ஆகியோர் நடிப்பு சிறப்பு.

மிரட்டும் இசையில் சாம்.சி.எஸ், அசத்தலான ஒளிப்பதிவில் ஏ.ஆர்.சூர்யா.
இயக்கம்-குமரன். வடசென்னை, கால்பந்து, பேய் ஆகிய மூன்றையும் கலந்து தாதாவை பழி வாங்கும் திரைக்கதையில் முதல் பாதி காதல், கால்பந்தாட்டத்தை மையப்படுத்தியும், இரண்டாம் பாதி பேய், பழிவாங்குதல் என்று வெறொரு கோணத்தில் செல்கிறது, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து கூட்டு கலவையாக கொடுக்க முயற்சிசெய்திருக்கிறார் இயக்குனர் குமரன்.

மொத்தத்தில் விளையாட்டோடு த்ரில்லிங் நிறைந்த படம் ஜடா

மொத்தத்தில் கொலைக்கான மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து பழி வாங்கும் படலம் ஜடா.