ஜகமே தந்திரம் : ஜூன் 7 வெளியாகிறது படத்தின் ஆடியோ… 18ஆம் தேதி படம் ரிலீஸ்!

0
21

‘ஜகமே தந்திரம்’ : ஜூன் 7 வெளியாகிறது படத்தின் ஆடியோ… 18ஆம் தேதி படம் ரிலீஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் `ஜகமே தந்திரம்’. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால், நேரடியாக இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்தது தயாரிப்பாளர் தரப்பு.

படம் ஜூன் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்துக்கான டீசர், ரகிட ரகிட பாடல், புஜ்ஜி, நேத்து என இரண்டு வீடியோ பாடல்கள் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது.  படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ஜூன் 7 ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்து இருக்கிறார். இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தப் படத்தின் எல்லா பாடல்களையும் ஜூன் 7ம் தேதி வெளியிடப்போகிறோம் என அறிவித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசைக்கு தனி ரசிகர்கூட்டம் இருப்பதால், இந்தப் பாடல்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் படம் தமிழ் மட்டுமில்லாமல், இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. கூடவே ஆங்கிலத்துலயும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.