சேசிங் விமர்சனம்

0
20

சேசிங் விமர்சனம்

வரலட்சுமி கிராமத்தில் போலீஸ் பயிற்சியில் சேரும் போது பூ விற்கும் பெண்ணிடம் நட்பாக பழக நாளடைவில் தன் தங்கையாகவே பாவிக்கிறார். இதனிடையே அந்தப் பெண்ணை அந்த கிராமத்தில் உள்ள பெரிய புள்ளி கடத்தி போதை மருந்து செலுத்தி பலாத்காரம் செய்து கொலை செய்து விட அதை கண்டு பிடிக்கும் வரலட்சுமியால் அங்கே இருக்கும் அதிகார பலத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. அதன் பின் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி பொறுப்பேற்று சமயம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாh.இதற்கிடையே உயர் அதிகாரியின் மகள் கடத்தலில் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றும் வரலட்சுமியை பாராட்டி கடத்தல் கும்பலை பிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் தன் போலீஸ் குழுவுடன் களமிருக்கும் வரலட்சுமிக்கு கடத்தல் கும்பலி;ல் சந்தேகிக்கப்படும் நபர்களை பிடிக்க செல்லும் இடத்தில் ஒருவர் பின் ஒருவராக கொலை செய்யப்பட்டு கிடக்க, அதற்கு காரணமான நபரை தேடி மலேசியா செல்கிறார். அங்கே தன் நண்பர் உதவியுடன் போதைப்பொருள் கடத்தும் கும்பல் தலைவனை பிடித்தாரா? வில்லனிடம் மாட்டிக் கொள்ளும் தன் சக போலீஸ் குழுவை காப்பாற்றினாரா? நெடுநாள் பழி வாங்க துடுத்த நபர்களை தண்டித்தாரா? தனக்கு கொடுத்த வேலையை முடித்து வெற்றிகரமாக இந்தியா திரும்பினாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

ஆக்ஷன் குயினாக படத்தில் சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கி சிறப்பாக நடித்துள்ளார் வரலட்சுமி மற்றும் பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா மற்றும் பலரின் நடிப்பு படத்திற்கு பலம்.

பாலசுப்ரமணியன் மற்றும் க்ரேசனின் எடிட்டிங் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடித்திருக்க அவரின் உருவாக்கத்தில் பிரகாஷ{டன் இணைந்து சிறப்பான ஆக்ஷன் ஸ்டண்ட் காட்சிகளும், ஈ.கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவும் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.
தசியின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. பாடல்கள் ஓகே.

அநீதி இழைக்கப்பட்ட ஏழைப்பெண்ணிற்காக பழி வாங்க துடிக்கும் போலீஸ் அதிகாரி, எவ்வாறு தன் பதவியை சாதகமாக்கி அதை சாதித்துக் கொண்டார் என்பதே திரைக்கதை. அதை முதல் பாதியில் இந்தியாவிலும், இரண்டாம் பாதி மலேசியாவிலும் படமாக்கி ஆக்ஷன் கலந்து விறுவிறுப்பாக படத்தை கொடுத்து அசத்தியுள்ளார் இயக்குனர் கே.வீரகுமார்.

மொத்தத்தில் ஏசிய இன் மீடியா சார்பில் மதியழகன் முனியாண்டி தயாரித்திருக்கும் சேசிங் படம் துரத்தல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவில்லை.

ALSO READ:

முன்னா விமர்சனம்