செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

0
29

செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றது. முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளிராமநாராயணன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், செயற்குழு உறுப்பினர் எஸ்.செளந்தரபாண்டியன்| செயற்குழு உறுப்பினரும் பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கிளாமர் சத்யா
பி.ஆர்.ஓ.