செம்பருத்தி டீ குடிக்க சொல்வதா? நயன்தாராவுக்கு எதிர்ப்பு! எதிர்ப்பை தொடர்ந்து செம்பருத்தி டீ பதிவை நயன்தாரா நீக்கிவிட்டார்!!

0
357

செம்பருத்தி டீ குடிக்க சொல்வதா? நயன்தாராவுக்கு எதிர்ப்பு! எதிர்ப்பை தொடர்ந்து செம்பருத்தி டீ பதிவை நயன்தாரா நீக்கிவிட்டார்!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் செம்பருத்தி டீ குடிப்பது நல்லது என்று பதிவு வெளியிட்டு இருந்தார். தான் தொடர்ந்து செம்பருத்தி டீ குடித்து வருவதாகவும் செம்பருத்தி டீ ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்தது என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். நயன்தாராவின் பதிவை பார்த்த ரசிகர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்று நாங்களும் செம்பருத்தி டீ குடிக்கப்போகிறோம் என்று தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நயன்தாராவின் பதிவுக்கு கல்லீரல் மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செம்பருத்தி டீ சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு நல்லது என்று நயன்தாரா சொல்லி இருக்கும் விஷயங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. தினமும் செம்பருத்தி டீ குடிப்பதில் கவனம் தேவை. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்துக்கு செம்பருத்தி டீ நல்லது என்று நயன்தாரா சொல்லி இருப்பது உண்மை அல்ல.

ஆண்களும், பெண்களும் செம்பருத்தி டீயை தினமும் குடித்தால் உடல் நலனில் பிரச்சினைகள் வரும். உடல் ஆரோக்கியத்துக்கு மருத்துவர்களின் ஆலோசனையை பெறுங்கள்” என்று கூறியுள்ளார்.

இது பரபரப்பானது. எதிர்ப்பை தொடர்ந்து செம்பருத்தி டீ பதிவை நயன்தாரா நீக்கிவிட்டார்.

https://x.com/theliverdr/status/1817745408787095994?t=9DrR93lcC5BPfneRkwK8ug&s=09

https://x.com/theliverdr/status/1817923241010475223

https://x.com/theliverdr/status/1817960254719803814

இந்நிலையில், அதே பதிவை மீண்டும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நயன்தாரா.

https://www.instagram.com/p/C99RZoYvBMR/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

https://www.instagram.com/p/C99RZoYvBMR/