சென்னை உலக சினிமா விழா வெற்றிகரமாக நிறைவு!

0
226

சென்னை உலக சினிமா விழா வெற்றிகரமாக நிறைவு!

செப்டம்பர் 1 2 3 ஆகிய மூன்று தேதிகளில் சென்னை உலக சினிமா விழா தினமும் ஆறு காட்சிகளோடு சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது.
6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு திரையிடப்பட்ட குறும்படங்கள் திரைப்படங்கள் ஆகியவற்றை கண்டுகளித்தார்கள்.
26 குறும்படம் மற்றும் திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன.
இலங்கை இயக்குனர் பிரசன்ன விதாநாயகா இவ்விழாவில் கலந்து கொண்டார்.
அவரது காடி என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.
எம் சரவணன் இயக்கத்தில் உருவான நாடு என்ற திரைப்படம் வேர்ல்ட் பிரிமியர் என்ற அந்தஸ்தில் துவக்க நாள் திரைப்படமாக திரையிடப்பட்டது.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஆர் எஸ் சிவாஜி அவர்கள் கலந்து கொண்டார்.
விழா மேடையில் அவரது நடிப்பை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்விழாவில் கலந்து கொண்டவர் அடுத்த நாள் இயற்கை எய்தியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது வாழ்நாளில் மிகச் சிறப்பாக நடித்த கார்கி என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

துவக்க நாள் விழாவில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவர் மற்றும் நடிகர் ராஜேஷ் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
இயக்குனர் ராசி அழகப்பன் எழுதிய உலக சினிமாவின் உன்னத படைப்புகள் என்ற நூல் நடிகர் ராஜேஷ் அவர்கள் வெளியிட திரைப்பட நட்சத்திரம் ஷீலா ராஜ்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெருமையை எடுத்துக் கூறும் வகையில் அவர் திரைக்கதை வசனம் அமைத்த இருவர் உள்ளம் என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்த திரையிடலுக்காகவே இருவர் உள்ளம் திரைப்படத்தை டிஜிட்டலில் ரெஸ்டாரேசன் செய்து பிரசாத் நிறுவனம் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நிறைவு நாள் விழாவில் கவிஞர் தேவேந்திர பூபதி கலந்து கொண்டு விழா ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி பேசி அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.
விழா நிறைவு திரைப்படமாக ரூபாய் 12000 முதலீட்டில் உருவான லெப்ட் ஓவர் என்ற மலையாள முழு நீள திரைப்படத்தை திரையிட்டார்கள்.
திரையிடல் முடிந்ததும் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் தொகுப்பாளர் ஆகியோர் குறைந்த முதலீட்டில் எவ்வாறு இந்த திரைப்படத்தை உருவாக்கினோம் என பார்வையாளர்களுக்கு விளக்கி கூறினார்கள்.
விழா ஏற்பாட்டாளர்கள் உலக சினிமா பாஸ்கரன் மற்றும் செந்தில்குமரன் சண்முகம் அனைவருக்கும் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்கள்.