சூ மந்திரகாளி விமர்சனம்

0
14

சூ மந்திரகாளி விமர்சனம்

பங்காளிப்பூர் கிராமத்து இளைஞன் கார்த்திகேயன், தன் கிராமத்தில் நிலவும் போட்டி, பொறாமை கலந்த உறவுகளை நினைத்து கவலைப்படுகிறார். அடுத்த கிராமமான சிங்கப்பூருக்கு சென்று இவர்களை திருத்த மந்திரவாதி ஒருவரை அழைத்து வர நினைத்து தன் நண்பனை பெண் வேடம் போட்டு தன்னுடன் கூட்டிச் செல்கிறார்.அங்கே சஞ்சனா புர்லி தான் சிறந்த மந்திரவாதி என்பதை உணர்ந்தாலும் அவரின் அழகில் மயங்கி காதலிக்க தொடங்குகிறார். சஞ்சனாவை திருமணம் செய்து கொண்டு செல்லலாம் என்று முடிவெடுக்கும் கார்த்திகேயனுக்கு ஏற்படும் அடுத்தடுத்த தடங்கல்கள் என்ன? அதைத் தாண்டி காதலித்தவரை கரம் பிடித்தாரா? கிராமத்திற்கு அழைத்து வந்தாரா? என்பமே க்ளைமேக்ஸ்.

இதில் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர் தேவ், முகில்,மரகதம் சிவபிரகாசம், நிரஞ்சனா,தனன்யா, கோவிந்த் மாயன், வி.ஸ்ரீதர், சிங்காரவேலன், மேட்டூர் சேகர், வெங்கடேஷ் பாபு, மு.க.சின்னன்னன் ஆகியோர் புதுமுகங்களாக இருந்தாலும் தங்களது இயல்பான நடிப்பால் தேர்ந்த நடிகர்கள் போல் ஜொலிக்கின்றனர்.

ஒளிப்பதிவு-முகம்மது ஃபர்ஹான், இசை-சதீஷ் ரகுநாதன் இவர்களது பங்கு படத்தின் முக்கிய காட்சிகளுக்கு கை கொடுத்து படத்தின் ஒட்டத்தை தோய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட உறவுகள் அமைந்து விட்டால் மனிதனின் வாழ்க்கை சின்னாபின்னாமாகும் என்பதை வித்தியாசமான முயற்சிகளோடு புதிய கதைக்களத்தோடு காட்சிக்கோணங்களை அமைத்து புதுவிதமான உணர்ச்சிகளை நகைச்சுவை கலந்து யதார்த்தமாக சொல்லி கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை. முதல் பாதி கலகலப்பு இரண்டாம் பாதி சலசலப்பு என்று கலந்து கட்டி காமெடிகலாட்டாவாக  களமிறங்கி அசத்திவிடுகிறார் இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை.

மொத்தத்தில் அன்னம் மீடியாஸ் அன்னக்கிளி வேலு தயாரிப்பில் வெளிவந்துள்ள சூ மந்திரகாளி பயமுறுத்தாத சிரிப்பு சரவெடி பார்த்து மகிழலாம்.