சூர்யா 40 படத்தின் லேட்டஸ்ட்…………

0
12

சூர்யா 40 படத்தின் லேட்டஸ்ட்…………

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ‘சூர்யா 40’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து ‘சூர்யா 40’ எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பெண்களுக்காக போராடுபவராக நடிக்கிறாராம் சூர்யா. அதனால் பொள்ளாச்சியில் நடந்த சில உண்மை சம்பவங்களை இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.