சூரரைப்போற்று ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூரரைப்போற்று ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்த படக்குழு அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால் இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

நேற்று இந்திய விமானப்படையின் தடையில்லா சான்றிதழை பெற்றிருக்கும் படக்குழு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 26-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.