சூப்பர் டூப்பர் திரை விமர்சனம்

0

சூப்பர் டூப்பர் திரை விமர்சனம்

ரேட்டிங்

துருவா தன் மாமாவுடன் சேர்ந்து சிறு திருட்டுக்களை செய்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வாழ்கின்றார். பணத்திற்காக இந்துஜாவை கடத்தும் துருவா பின்னர் ஆளை மாற்றி கடத்தி விட்டதை உணர்கிறார். அதே சமயம் போதை தடுப்பு பிரிவு அதியாரியான இந்துஜாவின் அப்பா கொல்லப்பட, அம்மா சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். அதனால் இந்துஜாவை காப்பாற்ற துருவா தன்னுடன் தங்க வைத்துக் கொள்கிறார். இந்துஜா தன்னுடைய காரில் 30 கோடி மதிப்பிலான போதைப் பொருள் இருப்பதாகவும், அந்த காரை கண்டு பிடித்து கொடுக்குமாறும் துருவாவிடம் கூறுகிறார். அந்தக் காரை ரௌடிக் கும்பல் ஒரு புறமும், துருவாவும் தேடி அலைகின்றனர். இறுதியில் போதைப் பொருள் யார் கையில் கிடைத்தது? இந்துஜாவின் அப்பாவை கொன்றது யார்? உண்மையான குற்றவாளி யார்? இந்துஜா குடும்பத்தின் மர்மம் என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
துருவா நடனத்திலும், ஆக்ஷன் காட்சிகளிலும் தனி முத்திரை பதிக்கிறார்.
இந்துஜாவிற்கு கவர்ச்சியான மாடர்ன் பெண்ணின் கதாபாத்திரத்தோடு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
காமெடிக்கு ஷிவாஷாரா, அசத்தும் வில்லன்ஆதித்யா ஷிவ்பிங்க், ஸ்ரீனி, நாகராஜன் கண்ணன், ஜானகி சுரேஷ், சௌந்தர்யா நஞ்சுன்டன் ஆகியோர் சிறப்பாக செய்திருக்கின்றனர்.
தளபதி ரத்தினம், சுந்தர் ராம் கிருஷ்ணம் ஆகியோரின் ஒளிப்பதிவு காட்சிக்கோணங்களில் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்பட்டிருக்கிறார்கள்.
திவாகரா தியாகராஜனின் இசை படத்திற்கு பலம்.
வசனம், எழுத்து, இயக்கம்- ஏகே. ஒவியக் சித்திரக் கதைப்போல் ஆங்கங்கே படங்களுடன் காட்சிகளை விரிவுப்படுத்தியிருக்கும் விதம் அருமை. ஆள் கடத்தல், போதைக் கடத்தல் செல்லும் திரைக்கதையில் திடீர் திருப்பமாக வில்லனின் என்ட்ரி க்ளைமேக்ஸ் காட்சிகள் என்று அசத்தலாக அமைத்திருந்தாலும் அதில் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், வலுவாக அமைத்திருந்தால் இன்னும் சூப்பர் டூப்பராக இருந்திருக்கும்.

மொத்தத்தில் பிளக்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷாலினி வாசன் தயாரித்ததுள்ள சூப்பர் டூப்பர் எதிர்பார்க்காத திருப்பங்கள் நிறைந்த புதுமையான படம்.

நம்ம பார்வையில் சூப்பர் டூப்பர் படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.