‘சுல்தான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
17

‘சுல்தான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2-ம் தேதி வெளியான சுல்தான் படத்தின் தெலுங்குப் பதிப்பு ஏப்ரல் 30-ம் தேதி வெள்ளிக்கிழமை ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். யுவன் இசை. ஏப்ரல் 2-ஆம் தேதி சுல்தான் தமிழ், தெலுங்கில் வெளியானது. மாஸ்டருக்குப் பிறகு ரசிகர்கள் சுல்தானுக்காக திரையரங்கில் திரண்டனர். தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் படம் லாபம் சம்பாதித்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக அரசு திரையரங்குகளை மூட உத்தரவிட்டதால் தமிழகத்தில் சுல்தானின் ஓட்டம் நிறுத்தத்திற்கு வந்தது. எப்போது சுல்தான் ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கையில் சுல்தான் தெலுங்குப் பதிப்பின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவித்துள்ளனர்.

ஏப்ரல் 30-ம் தேதி வெள்ளி அன்று ஓடிடி தளத்தில் தெலுங்கு சுல்தான் வெளியாகிறது. அதற்கான புதிய ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். நாகார்ஜுன் நடிப்பில் அதே ஏப்ரல் 2 வெளியான வைல்ட் டாக் திரைப்படம் தற்போது ஓடிடி யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் சுல்தானும் வரவேற்பை பெறும் என நம்பிக்கையுடன் உள்ளது தயாரிப்பாளர் தரப்பு.

இதேபோல் விரைவில் சுல்தான் தமிழ் பதிப்பின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.