சீமதுரை சினிமா விமர்சனம் ரேட்டிங் 2.5/5

0

சீமதுரை சினிமா விமர்சனம்

ரேட்டிங் 2.5/5

புவன் மீடியா வொர்க்ஸ் சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சந்தோஷ் தியாகராஜன் இயக்கியிருக்கும் படம் சீமதுரை.

கீதனை தாய் விஜி சந்திரசேகர் கருவாடு விற்று கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்.ஒரே கல்லூரியில் படிக்கும் வர்ஷாவை பார்த்தவுடன் காதல் கொண்டு துரத்தி துரத்திச் சென்று காதலில் விழ வைக்கிறார். வர்ஷாவின் தாய் மாமனுக்கு திருமணம் செய்ய பல இடங்களின் பெண் தேடியும் கிடைக்காமல் இறுதியில் வர்ஷாவை திருமணம் செய்து கொடுக்குமாறு அக்காள் கணவரிடம் வற்புறுத்துகிறார். இதைச் சற்றும் எதிர்பாராத வர்ஷாவின் தந்தை அவரை அடித்து விரட்டுகிறார். இதனால் கோபமடையும் தாய் மாமன் வர்ஷாவின் காதலுக்கு உதவுவது மாதிரி நடித்து சமயம் பார்த்து பழி வாங்க காத்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே வர்ஷாவின் காதல் பெற்றோருக்கு தெரியவந்து வர்ஷாவை வீட்டை விட்டு வெளியே போக கெடுபிடி செய்கின்றனர். இறுதியில் வர்ஷாவின் காதல் வெற்றி பெற்றதா? தாய் மாமன் போட்ட சதி திட்டம் என்ன? என்பதே படத்தின் அதிர்ச்சி தரும் க்ளைமேக்ஸ்.
புதுமுகம் கீதன் முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். வர்ஷா கண்களிலேயே நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்துகிறார். கிராமத்து ஏழைத்தாயாக விஜி சந்திரசேகர் மற்றும் மகேந்திரன், கயல் வின்சென்ட், காசி ராஜன், நிரஞ்சன், ஆதேஷ்பாலா, பொரி உருண்டை சுரேஷ் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு அக்மார்க் கிராமத்து வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.
ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
எழுத்து, இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன். அந்தஸ்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த காதல் ஜோடி எப்படி சொந்த பகையால் சின்னாபின்னாகி சிதைந்து போகிறது என்பதை யதார்த்தமாகவும், உணர்ச்சிகரமாகவும் திரைக்கதையமைத்து இறுதியில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன். படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் சம்மந்தமில்லை.
மொத்த்தத்தில் சீமதுரை டிராஜிடி நிறைந்த கிராமத்து காதல் கதை.

நம்ம பார்வையில் சீமதுரைக்கு 2.5 ஸ்டார் தரலாம்.