சிவராஜ்குமாரின் கோஸ்ட் பட டிரைலர் வெளியாகி உள்ளது!

0
199

சிவராஜ்குமாரின் கோஸ்ட் பட டிரைலர் வெளியாகி உள்ளது!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ள ‘கோஸ்ட்’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் சிவராஜ்குமார் ‘கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயராம், அனுபம் கேர், பிரசாந்த் நாராயணன் உள்ளிட்டோர் சினிமா பிரபலங்ஜள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீனி இயக்கி வருகிறார்.

ஆக்ஷன் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் பான் இந்தியா படமாக கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்கிறார். படத்தினை சந்தோஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தை பார்த்த ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடினர். ஜெயிலரில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் விக்ரம் படத்தின் ROLEX கதாபாத்திரத்திற்கு இணையான நடித்துள்ளதாக இணையத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சிவாராஜ் குமாரின் புதிய படமான கோஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டிரைலரை எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.