’சிவகார்த்திகேயன் 21’: நாயகியாகும் சாய் பல்லவி – அதிகாரபூர்வ அறிவிப்பு

0
149

‘சிவகார்த்திகேயன் 21’: நாயகியாகும் சாய் பல்லவி – அதிகாரபூர்வ அறிவிப்பு

’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளார். இதனை, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

’டாக்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ வரும் மே 13 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கில் வெற்றிபெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயேன். இப்படத்தினை முடித்தப்பிறகு, நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் ‘சிவகார்த்திகேயன் 21’ படத்தில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று சாய் பல்லவி தனது 30 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, கமல்ஹாசனுடன் சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளோடு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவின் நடிப்பும் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘கார்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி.