சிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்

0
8

சிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்

இந்த லாக்டவுன் நேரத்தில் பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக சிலர் மொட்டை மாடியில் தோட்டம் ஏற்படுத்தி வருகின்றனர். தங்களுக்கு தேவையான காய்கறிகளை அந்த தோட்டத்தில் இருந்தே பறித்து பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது வீட்டில் காய்கறி தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, “இதுதான் எனது காய்கறி தோட்டம். ஊரடங்குக்கு கொஞ்சம் முன்புதான் இந்த தோட்டத்தை தயார் செய்தேன். இப்போது இங்கிருந்துதான் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பறித்து பயன்படுத்துகிறேன் இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்றுதான் இந்த வீடியோ. இந்த தோட்டத்தை இன்னும் முழுமையாக தயார் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அதெல்லாம் தயாரானதும் திரும்பவும் உங்களுக்கு காட்டுகிறேன். எல்லோரும் பத்திரமாக இருங்கள். சீக்கிரம் நமது வாழ்க்கையும் இந்த காய்கறி தோட்டம் போன்று செழிப்பாகி விடும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’அயலான்’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ’டான்’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.