சிவகார்த்திகேயன் பட நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்

0
10

சிவகார்த்திகேயன் பட நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்

நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அந்த ஆண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்று. அப்படத்திலும், அதேபோல, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ரஜினி முருகன்’ படத்திலும் நகைச்சுவையோடு நடித்து கவனம் ஈர்த்தார் பவுன்ராஜ். குறிப்பாக, ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலையே கவிழ்த்துவிடும் அவரது காட்சி ரசிக்க வைத்தது.

இந்நிலையில், பவுன்ராஜ் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்” என்று வருத்தமுடன் தெரிவித்துள்ளார். சீமராஜா படத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுன் ராஜின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றன.