முதல் காட்சியிலேயே இது மொக்கை காமெடிகளும், ஒருவரை ஒருவர் கவுண்ட்டர் கொடுத்து கலாய்க்கும் விஜய் டிவி நிகழ்ச்சிகளின் சாயலும் கொண்ட, லாஜிக் எதிர்பார்க்க அவசியமில்லாத, ஒரு காட்சியிலும் சீரியஸ்னெஸ் இல்லாத படம் என்பதை ஒரு டிஸ்கிளைமர் போல பதிவுசெய்துவிடுவதால் அவற்றைப் பற்றி எதுவும் விமரிசிக்க இயலாது.
ஆனாலும் பார்க்கிற நமக்குள் என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும்?
அங்கங்கே சில காட்சிகளில் மட்டும் சிரிக்கிறோம்.
அங்கங்கே பல காட்சிகளில் கடுப்பாகிறோம்.
அங்கங்கே வசனத்தின் சாமர்த்தியத்தை ரசிக்கிறோம்.
அங்கங்கே அதே வசனத்தின் காரணமாக எரிச்சலடைகிறோம்.
சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்து வெளியே வந்தால் நல்ல படங்கள் தர இயலும்.
அல்லது சீமைராஜா, டான், பிரின்ஸ் என்றேதான் தன் கேரியரைத் தொடரப்போகிறார் என்றால் மிகுந்த பொட்டென்ஷியல் கொண்ட அவரைத் தொடர்பவர்கள் குறையத் தொடங்கிவிடுவார்கள் என்பது நட்பு ரீதியில் அவருக்கான ஒரு எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறேன்.