சிவகார்த்திகேயனின் தெலுங்குப் படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா

0
22

சிவகார்த்திகேயனின் தெலுங்குப் படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா

ஓடிடியின் தாக்கம் காரணமாக தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களை அனைத்து மொழி பேசுறவர்களும் பார்க்கின்றனர்.

சப் டைட்டில் அதற்கு பேருதவியாக இருக்கிறது. ஒரு படத்தை எப்படி பலமொழி ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதே இப்போதைய சினிமா வியாபாரத்தின் முதல் குறிக்கோளாக உள்ளது.

தெலுங்கில் சிவகார்த்திகேயனுக்கு  மார்க்கெட் உள்ளது. இதனால், தமிழ், தெலுங்கில் அவரை வைத்து படம் தயாரித்தால், மூன்று மாநிலங்களை கவர் செய்யலாம். இந்தத் திட்டத்துடன் தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர்கள் நாராயண் தாஸ் நரங், ராம் மோகன் ராவ் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கின்றனர். அனுதீப் இயக்குகிறார்.

அனுதீப் இதற்கு முன் இயக்கிய படம் ஜதி ரத்னலு. காமெடி திரைப்படம். விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்றது. சிவகார்த்திகேயனின் நகைச்சுவை நடிப்புக்கு நல்ல தீனி போடக்கூடியவர்.

சிவகார்த்திகேயனின் முதல் தெலுங்குப் படமான இதில் நாயகியாக நடிக்க இருப்பவர் சுல்தானில் கார்த்தி ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.