சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மே 13-ம் தேதி வெளியாகிறது..!

0
40

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மே 13-ம் தேதி வெளியாகிறது..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடித்துள்ளார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்தப் படம் மார்ச் 26-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மார்ச் 26-ம் தேதிக்கு பதிலாக ரம்ஜான் விடுமுறைக்கு ‘டாக்டர்’ வெளியாகும் என கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புதிய வெளியீட்டு தேதி ஒன்றை முடிவு செய்துள்ளோம். டாக்டர் வருண் மற்றும் குழுவினரை திரையரங்குகளில் ரமலான் பண்டிகை அன்றிலிருந்து சந்திக்கலாம். இந்த சமயத்தை எங்களது டாக்டரை மெருகேற்ற பயன்படுத்த உள்ளோம். நீங்கள் தவறாமல், மறக்காமல் வாக்களிக்கவும். நினைவிருக்கட்டும் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. திரையரங்குகளில் சந்திக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தின் பணிகளை முடித்து விட்டு விஜய்யின் 65 வது படத்தில் பிஸியாகி விட்டார் நெல்சன் திலீப் குமார். அதேபோல் சிவகார்த்திகேயன் ‘டான்’ படத்தின் ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.