சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ‘so baby’ பாடல் வெளியீடு!

0
7

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட ‘so baby’ பாடல் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடித்துள்ளார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதத்தில் ‘டாக்டர்’ படத்தின் ஷுட்டிங் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மூழு வீச்சில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு.

படத்தின் புரமோஷன் பணிகளில் இறங்கியிருக்கும் படக்குழு இன்று மாலை 5 மணிக்கு ‘சோ பேபி’ என்ற பாடலை வெளியிடப்படும் என்று நேற்று அறிவித்தது. ஆனால் குறித்த நேரத்தில் வெளியிட தவறிய படக்குழு, விரைவில் வெளியிடப்படும் என்று 1 மணி நேரத்துக்கும் மேலாக தெரிவித்து வருகிறது. படக்குழுவின் இந்த செயல் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது.

முன்னதாக டாக்டர் படத்திலிருந்து செல்லம்மா என்ற முதல் பாடலை 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடல் 98 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று ஹிட் அடித்தது.

டாக்டர், அயலான் ஆகிய படங்களை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது புதுமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்குகிறார். அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.