சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் நடிகர் தனுஷ்

0
39

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் நடிகர் தனுஷ்

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி இருந்தார்.

அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கி இருந்தார். தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

அப்போது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் வெற்றிமாறனும் விருதுகளை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கினார்.

சிறந்த நடிகருக்கான தேசியவிருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நடிகர் தனுஷுக்கு வழங்கினார். இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் தனுஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இரண்டாவது முறையாகும். அசுரன் படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.