சிம்பு-யுவன் கூட்டணியின் ஹிட் பாடல்கள் வரிசையில் மாநாடு: முதல் பாடல் வெளியீடு

0
21

சிம்பு-யுவன் கூட்டணியின் ஹிட் பாடல்கள் வரிசையில் மாநாடு: முதல் பாடல் வெளியீடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாடல் மெஹ்ரசைலா (Meherezylaa) இன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. சிம்பு – யுவன் கூட்டணிக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. பல வருடங்களுக்குப் பிறகு ’மாநாடு’ படத்தில் மீண்டும் இக்கூட்டணி இணைந்ததால் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. ஏற்கனவே, ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ உள்ளிட்ட சிம்பு-யுவன் கூட்டணியின் ஹிட் பாடல்கள் வரிசையில் ‘மாநாடு’ சேர்ந்துள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் மெஹ்ரசைலா பாடல் மட்டுமல்லாமல் நடிகர்களின் காஸ்டியூம், நடனம் என அனைத்தும் கவனம் ஈர்த்துள்ளது. ’ஒன்னும் ஒன்னும் ரெண்டுலா இன்பம் இங்கே பண்டலா’ என உற்சாகமுடன் யுவன் பாடலில், ’ஒத்த மனசில் ஒத்த காதல் ஒத்திக்கிட்டா போதும்லா’ என்ற வரிகள் ரிப்பீட் மோடில் கேட்க வைக்கின்றன. யுவன் சகோதரி பவதாரணியும் கடைசியில் நான்கு வரிகள் பாடியுள்ளது ரசிக்க வைக்கிறது.