சிம்புவுடன் இணைந்து டூயட் பாடிய சிவாங்கி

0
49

சிம்புவுடன் இணைந்து டூயட் பாடிய சிவாங்கி

சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் ‘மாயன்’. இப்படத்தை பிரபல தொலைக்காட்சியில் விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார்.
மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பாஜ்பையும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார். மற்றும் பிரபல நடிகர்களான ஜான் விஜய், ஆடுகளம் நரேன், ராஜ சிம்மன், கஞ்சா கருப்பு, ஸ்ரீ ரஞ்ஜினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானா பாடகி சிவாங்கி, நடிகர் சிம்புவுடன் இணைந்து இப்படத்தில் டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளார். ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.