சிம்புவின் அரசியல் என்ட்ரி…! மாநாடுக்கு தயாராகும் பிரமாண்டமான மைதானம்!!

0
4

சிம்புவின் அரசியல் என்ட்ரி…! மாநாடுக்கு தயாராகும் பிரமாண்டமான மைதானம்!!

‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மிகப்பெரிய மைதானம் தயாராகி வருவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

அரசியலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. பொங்கலுக்கு மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி மாநாடு படத்தின் டீசரை வெளியிட்டனர்.

தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான மைதானம் தயாராகி வருவதாக ட்விட்டரில் தெரிவித்திருக்கும் சுரேஷ் காமாட்சி அதற்கான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் பொதுக்கூட்டத்திற்கான செட் அமைக்கப்படும் பணி நடந்து வருவதைப் பார்க்க முடிகிறது. விரைவில் மாநாடு படத்திற்கான பொதுக்கூட்ட காட்சிகளில் நடிகர் சிம்பு நடிப்பார் என தெரிகிறது.

அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில்‘பத்து தல’ மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.