“சின்ன கலைவாண’ருக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ இரங்கல்!”

0
35

“சின்ன கலைவாண’ருக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ இரங்கல்!”

தமிழ் சினிமாவில் ‘சின்ன கலைவாணர்’ என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ‘பத்மஸ்ரீ’ விவேக் அவர்களின் மறைவுக்கு ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம் ‘ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு சமூக சீர்திருத்த கருத்துக்களை கலைவாணர் N.S.கிருஷ்ணன் வழியில் எடுத்துச்சொல்லி மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் ‘சின்ன கலைவாணர்’ என அன்போடு அழைக்கப்பட்டவரும் ‘முன்னாள் குடியரசு தலைவர்’ டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின மிகப்பெரும் கனவுகளில் ஒன்றான ‘பசுமை தமிழகம்’ திட்டத்தை நிறைவேற்றும் வகையில்., தான் முக்கிய பொறுப்பு வகித்து வந்த “கிரீன் கலாம் அமைப்பு” மூலம் தமிழகம் முழுதும் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்து, இடைவிடாது தொடர்ந்து செயல்பட்டு, கிராமங்கள் , நகரங்கள் , மாநகரங்கள்… உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எண்ணற்ற இடங்களில் இதுவரை கிட்டத்தட்ட 35 லட்சம் மரக்கன்றுகள் நட்டு ., சிறந்த சமூக செயல்பாட்டாளராகவும், அதைவிட சிறப்பான மனிதநேய பண்பாளராகவும் செயலாற்றி வந்த ‘செயல்வீரர்’ நடிகர் பத்மஸ்ரீ விவேக்கின் எதிர்பாராத மரணம் தமிழ் சினிமாத்துறையில் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகும். அவர் மறைந்தாலும்., நிச்சயம் அவர், நட்டுச்சென்ற லட்சக்கணக்கான மரங்களின் மூலம் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் , ரசிகர்களுக்கும் , தமிழக மக்களுக்கும் ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

‘சின்ன கலைவாணர்’ பத்மஸ்ரீ விவேக் அவர்களே., நீங்கள் மறைந்தாலும் உலகம் உள்ளவரை… உங்கள் புகழ் , லட்சக்கணக்கில் நீங்கள் நட்ட மரக்கன்றுகள் மாதிரியும் , மனிதம் தழைக்க விதைத்த எண்ணற்ற சமூக சீர்திருத்த கருத்துக்கள்… போன்றும் என்றென்றும்., ஓங்கி உயர்ந்து நிற்கும் என்பது மட்டும் நிச்சயம் !

ஆழ்ந்த இரங்கலுடன் …

நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் & உறுப்பினர்கள்.

சினிமா பத்திரிகையாளர் சங்கம், சென்னை – 24