சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது – கடம்பூர் ராஜூ தகவல்

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது – கடம்பூர் ராஜூ தகவல்

சென்னை,

சினிமா திரைப்பட படப்பிடிப்புக்கு திரைத்துறையினர் அனுமதி கோரியிருந்த நிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,

சினிமா படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும் போது மக்கள் கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது. சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது என்றார்.