சித்திரைச் செவ்வானம் விமர்சனம்: மனதை நெகிழ வைக்கும் சித்திரைச் செவ்வானம்

0
72

சித்திரைச் செவ்வானம் விமர்சனம்: மனதை நெகிழ வைக்கும் சித்திரைச் செவ்வானம்

சிறுவயதிலிருந்தே டாக்டராக பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் தாயை இழந்த மகளை கண்ணும் கருத்துமாக வளர்ச்கிறார் சமுத்திரகனி. பள்ளிப்படிப்பு முடிந்து நீட் தேர்விற்காக தனியார் கோச்சிங் வகுப்பில் சேர்த்து விடுகிறார். அங்கே ஹால்டலில் தங்கி படிக்கும் பூஜா கண்ணன் திடீரென்று காணாமல் போக, போலீசில் புகார் கொடுக்கப்படுகிறது. அதன் பின் நடந்து என்ன? பூஜா கண்ணனை போலீஸ் கண்டுபிடித்ததா? மகளுக்காக சமுத்திரகனி எடுக்கும் முயற்சிகள் என்ன? மகளை டாக்டராக பார்க்க வேண்டும் என்று நினைத்த சமுத்திரகனி இழந்தது என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

சமுத்திரகனி, பூஜா கண்ணன் போட்டி போட்டுக்கொண்டு அப்பா மகளாக படம் முழுவதும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். ரீமா கல்லிங்கல், வித்யா பிரதீப், சுப்பிரமணிய சிவா, நிழல்கள் ரவி, பாண்டியன், ஹரிணி சுரேஷ், க்ரிஷ் செல்வா, விதூர், ஜீவா, பிரனவ் ஆகியோர் படத்தில் அழுத்தமான அஸ்திவாரங்கள்.

சாம் சி எஸ் அவர்களின் பின்னனி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் மற்றும் வெங்கடேஷ் கதைக்கேற்ற  யதார்த்த மிகையில்லாமல் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

மகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களை தந்தை எப்படி பழி வாங்குகிறார் என்பதை பொள்ளாச்சி சம்பவத்தோடு இணைத்து திரைக்கதையை இயக்கியிருக்கிறார் ஸ்டன்ட் சில்வா. குற்றவாளிகளை பழி வாங்குபவர்களை இரண்டு கோணங்களில் காட்டி அதை போலீஸ் மெத்தனமாக விசாரிப்பதும், இறுதியில் கிட்டத்தட்ட அருகில் நெருங்கும் போது பிடிபடாமல் இறப்பது போன்ற காட்சிகள் யூகிக்க கூடியதாக இருந்தாலும் முதல் முயற்சிக்கு கடினமான உழைப்பை தந்து இயக்கியிருக்கும் ஸ்டன்ட் சில்வாவிற்கு வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் தின்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் மற்றும் அமிர்தா ஸ்டுடியோஸ் சார்பில் பி.மங்கையர்கரசி தயாரிப்பில் சித்திரைச் செவ்வானம் மனதை நெகிழ வைக்கும் சம்பவங்களோடு ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.