சிங்கம் சிங்கிளாத்தான் வரும்… அஜித்தின் வலிமை வெளியீட்டை வேற மாறி தெறிக்கவிடும் தல ரசிகர்கள்… படங்கள்!

0
56

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்… அஜித்தின் வலிமை வெளியீட்டை வேற மாறி தெறிக்கவிடும் தல ரசிகர்கள்… படங்கள்!

சோலோ ரிலீசாக தல அஜித்தின் வலிமை திரைப்படம் வரப் போகிறது என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வலிமை வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் நாளுக்குரிய அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகி விட்டது.

வலிமை படத்தை நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்த ரசிகர் நயாகரா நீர்வீழ்ச்சி அருகிலிருந்து வலிமை படத்திற்கான பிரமோஷனை செய்கிறார்.

இவர்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அஜித் ரசிகர்கள். தங்களின் அஜித் மோகத்தை அவரது பேனர் உடன் வெளிப்படுத்துகிறார்கள்.

அனைத்து திரையரங்குகளும் பிரமாண்டமான பேனர்களுடன் வலிமை வெளியீட்டுக்கு தயாராகி விட்டன.

இது ஸ்டுடியோ கிரீனுக்கு சொந்தமான சென்னை பாடியிலிருக்கும் திரையரங்கு. அங்கு வீ லவ் ஏகே என அலங்காரம் செய்து உள்ளனர்.

இது இன்னொரு திரையரங்கு. பெரியவர்கள் இளைஞர்கள் மட்டுமல்ல குட்டீஸ்களிலும் உண்டு அஜித் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கான அதிகாலை திரையிடல்களுக்கான சிறப்பு டிக்கெட்கள் அனைத்துத் திரையரங்குகளிலும் உள்ளன.

ராம் முத்துராம் திரையரங்கு உரிமையாளர் ரசிகர் மன்றத்தினருக்கான அதிகாலை காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை அவர்களிடம் வழங்கி முன்பதிவை தொடங்கி வைக்கிறார்.

இது சிறைச்சாலை கதவு இல்லை. திரையரங்கின் முன்பகுதியில் உள்ள கேட். இதற்குப் பின்னால் ரசிகர்கள் கும்பலாக நிற்பதைப் பார்க்கலாம்.

கேட் திறந்ததும் வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளை போல ரசிகர்கள் ஓடுகிறார்கள்.

ரசிகர்களுக்கான அதிகாலை திரையிடல்களுக்கான சிறப்பு டிக்கெட்கள் அனைத்துத் திரையரங்குகளிலும் உள்ளன.

கர்நாடகாவில் உள்ள ரசிகர்கள் சமீபத்தில் மறைந்த புனித் ராஜ்குமாரின் படத்துடன் வலிமை படத்திற்கான பேனர்களை வைத்துள்ளார்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியில் அஜித்தின் வலிமை வெளியாகிறது. இதற்காக மும்பையிலும் விளம்பரங்கள் பிரமாண்டமான அளவில் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் வலிமை முதல்நாள் முதல்காட்சியை சிறப்பு அழைப்பாளர் நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷுடன் கொண்டாடுகிறார்கள்.

கேரளா எப்போதுமே ஸ்பெஷல். அங்கு பிரமாண்ட கட்அவுட் முன்னால் அஜித் ரசிகர்கள்.

இது கேரளாவின் எர்ணாகுளம். பிரமாண்ட பேனர் தயாராகிக் கொண்டிருக்கிறது.

வலிமை வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல் நாளுக்குரிய அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகி விட்டது. எல்லா இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்டுகள் தொங்குகின்றன.

காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என அறிவித்த நிலையில் நள்ளிரவிலேயே வந்து குவிந்து வலிமை டிக்கெட் கேட்டு கத்திய ரசிகர்கள் கூட்டம்.

வலிமை டிக்கெட்டுகள்