சாம்பியன் திரை விமர்சனம்

0

சாம்பியன் திரை விமர்சனம்

வடசென்னை கால்பந்தாட்ட வீரர் விஸ்வா. தந்தை மனோஜ் ஏரியா கவுன்சிலர் ஸ்டன்ட் சிவாவிடம் அடியாளாக வேலை செய்கிறார். தற்செயலாக தந்தை மனோஜ் கால்பந்தாட்ட விளையாட்டில் ஸ்டன்ட் சிவாவுடன் விளையாடும்  போது இறந்து விடவே, தாய் வாசவி கால்பந்தாட்டத்தை விளையாட விஸ்வாவை அனுமதிக்காமல் இருக்கிறார். தாய்க்கு தெரியாமல் பள்ளியில் கால்பந்தாட்டத்தை விளையாடி வருகிறார் விஸ்வா. இந்திய அளவில் தேர்ச்சி பெற சிறந்த கால்பந்தாட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் சேர கோச்சாக தந்தை மனோஜின் நண்பர் நரேன் வர, சிறப்பு பயிற்சிகள் அறிவுரைகள் கூறி லீக் ஆட்டத்தில் விiளாயட தீவிர பயிற்சி கொடுக்கிறார். இந்நிலையில் ஸ்டன்ட் சிவா தான் தன் தந்தையை கொலை செய்தார் என்பதை அறிந்த விஸ்வா பழி வாங்க துடிக்கிறார். விளையாட்டில் கவனம் வை அடிதடி வேண்டாம் என்று விஸ்வாவை நரேன் வற்புறுத்துகிறார். இதனிடையே ஸ்டன்ட் சிவா உண்மையை தெரிந்து கொண்ட விஸ்வாவை போட்டு தள்ள அடியாட்களை அனுப்புகிறார். இறுதியில் என்ன நடந்தது? விஸ்வா பழி வாங்கினாரா? விளையாட்டில் கவனம் செலுத்தினாரா? என்பதே க்ளைமேக்ஸ்.
ஜோன்ஸ் என்ற கால்பந்தாட்ட வீரராக விஸ்வா கச்சிதமான தேர்வு, நடிக்கும் போது முகபாவங்களில் கொஞ்சம் இறுக்கம் இல்லாமல் இயல்பாக நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் முதல் படத்திற்காக கவனம் செலுத்தி விளையாட்டு பயிற்சி எடுத்து நடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.
கோச்சாக நரேன், தந்தையாக மனோஜ், தாயாக வாசவி, வில்லனாக ஸ்டன்ட் சிவா, தோழிகளாக சௌமிகா, மிருணாளினி, விஸ்வாவிடம் அடிதடியில் இறங்கும் தாமு, பிச்சைக்காரன் வினோத், சிறப்பு தோற்றத்தில் ராமன் விஜயன் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு சிறப்பு.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு, அரோல் கரோலி இசை படத்திற்கு கூடுதல் பலம்.
சுசீந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய சாம்பியன் படத்தில் வடசென்னை கால்பந்தாட்ட இளைஞர்;களின் அவல நிலையை தோலுரித்து காட்டி, அதில் நட்பு, பழிவாங்குதல், அடிதடி, சென்டிமெண்ட் கலந்து அனைத்தும் கலந்த கலவையாக படம் முழுவதும் அள்ளித்தெளித்திருக்கிறார். தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மகனின் நிலையை சிறப்பாகவும், யதார்த்தமாகவும், தோய்வில்லாமல் கச்சிதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
மொத்தத்தில் மனதை அள்ளும் நிஜ சாம்பியன்.