சர்தார்.. வெளியானது கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

0
23

சர்தார்.. வெளியானது கார்த்தி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் ‘சுல்தான்’ திரைப்படம் வெளியானது. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் வசூலைக் குவித்து வெற்றிப்படமாக அமைந்ததோடு மாஸ்டர் படத்துக்குப் பின் தியேட்டர்களுக்கு மக்கள் வர காரணமாகவும் அமைந்தது.

தற்போது  கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக முடி, தாடி என லுக்கில் வித்தியாசம் காட்டியிருந்த கார்த்தி அதே தோற்றத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. ‘சர்தார்’ என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நரைத்த தாடி, நீண்ட தலைமுடி, சுருங்கிய முகத்துடன் தோன்றியுள்ளார் கார்த்தி.

கார்த்தியின் 22-வது படமாக உருவாகும் இத்திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் ஒளிப்பதி செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்த சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் சர்தார் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.