சர்தார் படத்தில் கார்த்தியின் வித்தியாசமான தோற்றம்! வைரலாகும் படம்

0
86

சர்தார் படத்தில் கார்த்தியின் வித்தியாசமான தோற்றம்! வைரலாகும் படம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்துவரும் சர்தார் படத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் கார்த்தி தோன்றுகிறார்.

கார்த்தி நடிப்பில் சென்ற வருடம் சுல்தான் படம் வெளியானது. படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் போட்ட காசை எடுத்தது. இதற்கடுத்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை முடித்த கார்த்தி, விருமன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அப்படமும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக கார்த்தி பி.எஸ்.மித்ரனின் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். 2020-ல் தொடங்கப்பட்ட படம் இது.

இந்தப் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்று இளமையான கார்த்தி, இன்னொன்று முதுமையான கார்த்தி. ஆகையால் அப்பா, மகனாக இதில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. வயதான தோற்றத்தில் நரைத்த தாடி, தலைமுடியுடன் கார்த்தி அட்டகாசமாக உள்ளார். இந்தத் தோற்றம் தற்போது வெளியாகியுள்ளது.

ஆக்ஷன் என்டர்டெயினராக வெளியாகும் சர்தாரில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இளமையான கார்த்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது மித்ரன் படமாக்கி வருகிறார். விருமன் வெளியான பிறகு சர்தார் திரைக்கு வரும். சர்தார் கார்த்தி ரசிகர்களுக்கு வித்தியாசமான ட்ரீட்டாக இருக்கும்.