சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நயன்தாரா!

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த நயன்தாரா!

அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

நயன்தாரா வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்த போதும் காதலருக்காக கணவரை கொலை செய்யும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரம் என்பதால் அப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுப்பு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்சமயம் நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே படப்பிடிப்பில் பங்கேற்க நயன்தாரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.