சமூக வலைத்தளத்தில் வைரலாகும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரனின் ‘ஹாஸ்டல்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

0
11

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரனின் ‘ஹாஸ்டல்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மலையாளத்தில் 2015-ல் வெளியான படம், அடி கப்பியாரே கூட்டமணி. முழுக்க நகைச்சுவையில் தயாரான இந்தப் படத்தில் நாயகியாக நமிதா பிரமோத்தும், நாயகனாக தயன் ஸ்ரீனிவாசனும், நண்பர்களாக அஜு வர்க்கீஸ் மற்றும் நீரஜ் மாதவும் நடித்திருந்தனர். கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன் ஃபாதர் ஆல்ஃபிரட் காட்டுவிளையில் கதாபாத்திரத்தில் முகேஷ் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்வதாக ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே கூறி வருகிறார்கள். ஆனால், இப்போது தான் நடந்திருக்கிறது.

பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் இந்த ரீமேக்கை தயாரிக்க, அசோக்செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். போபோ சசி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.