சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பு பெறும் ‘துப்பறிவாளன்’ ஃபர்ஸ்ட் லுக்!

0
1475

சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பு பெறும் ‘துப்பறிவாளன்’ ஃபர்ஸ்ட் லுக்!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘துப்பறிவாளன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டது படக்குழு.

நடிகர் விஷால் ‘கத்தி சண்டை’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். வினய், பிரசன்னா, இயக்குநர் பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

அரோல் கொரேலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சென்னையில் இப்படப்பிடிப்பு தொடங்கி 2 கட்டங்களை முடித்துள்ளனர். இதில் சுமார் 65% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இம்மாத இறுதியில் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி, மொத்தமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘துப்பறிவாளன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்க்கை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.