சங்கத்தலைவன் விமர்சனம்

0
29

சங்கத்தலைவன் விமர்சனம்

சேலத்தில் தறி தொழிற்சாலை நடத்தும் மாரிமுத்துவிடம் வேலை செய்கிறார் கருணாஸ்.இங்கு வேலை செய்து வரும் ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு கை துண்டாகிறது.  இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் ஏமாற்ற நினைக்கிறார் மாரிமுத்து. இதனையறிந்து கருணாஸ் நெசவுத் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடும் சமுத்திரக்கனியிடம் சொல்ல அந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு கிடைக்கிறது. இதற்கு காரணம் கருணாஸ் என்பதையறிந்து மாரிமுத்து வேலையையும் பறித்து பழிவாங்க துடிக்கிறார்.கருணாஸ் தலைமறைவாகிறார். வீட்டை விட்டு விலகி ஆதரவற்றுத் தனித்து நிற்கும் கருணாஸ் என்ன முடிவெடுக்கிறார், அவருக்கு சமுத்திரக்கனி ஆதரவு கொடுக்கிறார். தலைமறைவாகும் கருணாஸ், தொழிற்சங்க தலைவர் ஆகிறார். மாரிமுத்து பழி வாங்கினாரா?  இறுதியில் நடந்தது என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

சமுத்திரகனி , கருணாஸ் , மாரிமுத்து, ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி, பாலா சிங், ஜூனியர் பாலையா, சீனு மோகன் படத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கு உறுதுணையாகவும், காட்சிகளுக்கு வலு சேர்கின்றனர்.

ராபர்ட் சற்குணத்தின் இசையும், பின்னணி இசையும், ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவும் சிறப்பாக காட்சிக் கோணங்களில் கொடுத்து கைதட்டல் பெறுகின்றனர்.

படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி கூடுதல் நீளத்தோடு மேலும், வசனங்கள் மூலமாகவே பல உண்மைச் சம்பவங்களை உள்ளே சேர்த்துள்ளார்கள். தொண்டன் தலைவனாவகும் கதையில் க்ளைமேக்ஸ் மனதை கனக்கச் செய்கிறது. சமுத்திரகனி, கருணாஸ் ஆகியோரை மையமாக வைத்து போராட்டக்களத்துடன் தன்னால் முடிந்த வரை பெரிய பங்களிப்பையும், உழைப்பையும் தந்திருக்கும் இயக்குனர் மணிமாறனுக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் சங்கத்தலைவன் வெல்வான்.