சங்கத்தமிழன் சினிமா விமர்சனம்

0

சங்கத்தமிழன் திரை விமர்சனம்

நடிப்பு – விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ்
தயாரிப்பு – விஜயா புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – விஜய் சந்தர்
இசை – விவேக் மெர்வின்
வெளியான தேதி – 15 நவம்பர் 2019
நேரம் – 2 மணி நேரம் 30 நிமிடம்

தேனி மாவட்டத்தில் உள்ள மருதமங்கலம் கிராமத்தில் தாமிர உருக்காலை அமைக்கத் ஏற்பாடு செய்கிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அங்கு காப்பர் தொழில்சாலை அமைந்தால் அது மக்கள் நலனை பாதிக்கும் என்பதால் அந்த தொழில்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் ஊர் மக்கள். அதனால் வரப்போகும் சூழல் சீர்கேட்டை அறிந்து, ஆலை வரக் கூடாது என்று ஊர் மக்கள் வழக்கு தொடுக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்கும் தாமிர உருக்கு ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சென்னையில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று தன் நண்பர் சூரியுடன் சேர்ந்து முயற்சி செய்து வருகிறார் முருகன் (விஜய்சேதுபதி.) இந்நிலையில் பெரிய தொழிலதிபராக இருக்கும் ரவி கிஷன் மகள் ரகமாலினிக்கும் (ராஷி கன்னா) விஜய் சேதுபதிக்கும் இடையில் காதல் உருவாகிறது. மகளின் காதலனை நேரில் பார்க்கும் ஆலை அதிபர், ‘அது முருகன் அல்ல் தமிழ்” என்று அலறுகிறார். முருகன் யார் என்று தன் ஆட்கள் மூலம் தெரிந்துக்கொள்கிறார். பிறகு முருகனை அழைத்துப் பேசும் தொழிலதிபர், தன் தாமிர ஆலைக்கு எதிர்ப்பு நிலவும் ஊருக்கு முருகனை அனுப்பி, அந்த ஊரைச் சேர்ந்த சங்கத் தமிழனைப் (விஜய் சேதுபதிதான்) போல நடித்து, ஊர் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும்படி சொல்கிறார். பிறகு என்ன ஆகிறது. உண்மையில் யார் அந்த தமிழ்? தமிழுக்கும் முருகனுக்கும் என்ன சம்மந்தம்? அந்த ஊர் மக்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான உறவு? என்பது மீதிக் கதை.

வித்தியாசமான கதைகளத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி, இதில் மாஸ் ஹீரோவாக முயற்சித்துள்ளார்.வெற்றி பெற்றுள்ளார்.

ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் சூரி கதை ஓட்டத்திற்கு வலுவை சேர்க்கிறார்கள்.

வில்லனாக வரும் ரவி கிஷன், எம்.எல்.ஏ.வாக வரும் ஆசதோஷ் ராணா, விஜய்சேதுபதியின் அப்பாவாக வரும் நாசர், மைம் கோபி, ஸ்ரீமன், சௌந்தர்ராஜா, ஸ்ரீரஞ்சனி, மாரிமுத்து, கல்லூரி வினோத், லல்லு, ஜான் விஜய் ஆகியோர் பொருத்தமான கதாபாத்திரங்கள்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு சூப்பர். விவேக் – மெர்வின் இசை ஓகே. பின்னணி இசை கவனம் தேவை.

பிரவீன் கே.எல் எடிட்டிங் கொஞ்சம் ஷார்ப் தேவை.

சமகால பிரச்சினையை கொஞ்சம் வித்தியாசமாக கொண்டு செல்ல முயற்சித்து , தெளிவில்லா திரைக்கதையில் விஜய் சேதுபதியை மாஸ் ஹீரோவாக காட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.

மொத்தத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள சங்கத்தமிழன் கார்ப்பரேட் நிறுவனங்களை எச்சரிப்பவன்.

நம்ம பார்வையில் ‘சங்கத்தமிழன்” படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.