சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை விமர்சனம்: சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை நயமாக பேசி சிக்க வைக்கும் சிரிப்பு
நபீஸா மூவிஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்து ருத்ரா, சுபிக்ஷா, சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடிக்க கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் மகேஷ் பத்மநாபன்.பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ் அப்புகுட்டன் இசையில், சுதாகர் படத்தொகுப்பு செய்துள்ளார். மக்கள் தொடர்பு மணவை புவன்.
கதிர் (ருத்ரா ) ஆடியோகிராபியில் கோல்ட் மெடலிஸ்ட் என்றாலும் பாட்டி, அப்பா, அத்தை ஆகியோரை பார்த்துக்கொண்டு தன் சொந்த ஊரில் நண்பனின் ஸ்டுடியோவில் வேலை பார்க்கிறார். சென்னையில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் ஸ்ருதி ( சுபிக்ஷா ) ஒரு ஆடியோ டாக்குமெண்டரிக்காக கதிரை தேடி வர வனப்பகுதியில் ஒலிகளை பதிவு செய்து கொடுக்கிறார். ஒலிப்பதிவுக்காக அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் முரண்பாடுகள் இருந்தாலும் கதிர் தன் வேலையில் கவனமாக இருந்து பணியை முடித்துக்கொடுக்கிறார். அந்த டாகுமெண்ட்ரி பல விருதுகளை ஸ்ருதிக்கு பெற்றுத்தர அதற்கு காரணம் கதிர் என்பதை உணர்ந்து சென்னைக்கு வரவழைக்கிறார். பிபிசிக்காக ஆடியோ டாக்குமெண்ட்ரி செய்யவரும் டேவிட் ஸ்ருதியின் உதவியை நாட ஸ்ருதி வேலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக கதிரை சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்து கொள்கிறார். ஸ்ருதியின்; ஆசை வார்த்தைகளை உண்மை என்று நம்பும் கதிர் அவளிடம் மனதை பறிகொடுக்க ஸ்ருதி ஒரு சந்தர்ப்பவாதி, கதிரை வைத்து தன் காரியத்தை சாதித்துக்கொள்கிறாள் என்பதை உணர்ந்த டேவிட் கதிரை தனியாக சந்தித்து அவளைப்பற்றிய உண்மைகளை எடுத்துரைத்து இனியும் அவளிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கிறார். அதே சமயம் ஸ்ருதியின் கணவர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் வர, ஸ்ருதியிடமிருந்து நிரந்தரமாக விலக நினைத்து கதிர் ஊருக்கு வந்து விடுகிறார். ஸ்ருதி விடாமல் கதிரை தேடி ஊருக்கே வந்து ஆசை வார்த்தைகளை கூற, கதிர் இதை நம்பி ஸ்ருதியுடன் சென்றாரா? ஸ்ருதியின் சுயரூபம் என்ன என்பதை உணர்ந்து காதலை கைவிட்டாரா? என்பததே படத்தின் க்ளைமேக்ஸ்.
அறிமுக நாயகன் ருத்ரா முதல் காட்சியில் முதல் இறுதிக் காட்சி வரை அசத்தலான நடிப்பு, ஒலிகளை பதிவு செய்ய ரிஸ்க் எடுத்து நடித்து பிரம்மிப்பை ஏற்படுத்துகிறார். கோவா இன்டர்நேஷனல் பிலிம் காம்படீஷன், செவன் கலர்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல் , சில்வர் ஸ்கிரீன் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல் , இண்டியன் மீராக்கி அவார்டு 2021, ஆர்ஐஎஃப்எஃப் உள்ளிட்ட 5 சிறந்த நடிகர் விருதுகள் அறிமுக நாயகர் ருத்ராவிற்கு கிடைத்திருக்கிறது… என்பது கூடுதல் சிறப்பு.
சுபிக்ஷா மாடர்ன் எண்ணம் கொண்ட துணிச்சலான கதாபாத்திரம் முக்கி பங்களிப்பு படத்திற்கு பலம்.
மற்றும் சுபலக்ஷ்மி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு காட்சிக்கோணங்கள் அசத்தல் ரகம். ராஜேஷ் அப்புகுட்டன் இசையில், சுதாகர் படத்தொகுப்பு படத்திற்கு பெரிதும் உதவி செய்துள்ளன.
அடர்ந்த காடு, வனப்பகுதி, மலைகள், கிராமத்து இயற்கை எழில் என்று பார்த்து பார்த்து இந்த படத்திற்காக காட்சிகளை அமைத்து அதில் வித்தியாசமான கோணத்தில் காதல் கதையை சொல்லி ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிந்த வரை சுவாரஸ்யமாக இயக்கியுள்ளார் மகேஷ் பத்மநாபன்.
மொத்தத்தில் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை நயமாக பேசி சிக்க வைக்கும் சிரிப்பு.