க் விமர்சனம்: சிறப்பாக செயல்படுத்தியிருந்தால், க் ஒரு திடமான படம்

0
108

க் விமர்சனம்: சிறப்பாக செயல்படுத்தியிருந்தால், க் ஒரு திடமான படம்

தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் மற்றும் பிரபு தயாரிப்பில் அறிமுக நாயகன் யோகேஷ் (வசந்த்), குருசோமசுந்தரம் (ஞான பிரகாசம்), அனிகா விக்ரமன் (தன்யா), ஆடுகளம் நரேன் (ஞானவேல்), ஒய்.ஜி.மகேந்திரன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் க்.
ராதா கிருஷ்ணன் ஓளிப்பதிவு கவனித்து, கவாஸ்கர் அவினாஷ் இசையக்க, அறிமுக இயக்குநர் பாபு தமிழ் இயக்கியுள்ளார்.

கதாநாயகன் வசந்த் சந்திரசேகர் (யோகேஷ்) கால்பந்து விளையாட்டு வீரர். பயிற்சியின் போது கால்பந்தில் அடிபட்டு புறா இறந்து போகிறது. பிறகு தேசிய அளவிலான போட்டியில் விளையாடும் போது மைதானத்தில் விபத்து ஏற்பட்டு, தலை மற்றும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்த் சந்திரசேகர் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார்.கொலையை தான் பார்த்ததாக போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் ஒருசிறு குழந்தையின் பார்வை, பயிற்சியின்போது கால்பந்தில் அடிபட்டு புறா இறந்தது, மருத்துவமனை சன்னல் வழியே நடைபெறும் ஒரு கொலை, இந்த மூன்றும் நாயகனுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது. இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து வசந்த் சந்திரசேகர் மீண்டாரா? கொலை செய்தது யார் என்பதை வசந்த் சந்திரசேகர் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் வசந்த் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார் யோகேஷ். இவரது மனைவியாக நடித்துள்ள அனிகா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஞானப்பிராகசமாக வரும் குரு சோமசுந்தரம் அழுத்தமான கதாபாத்திரத்த்pல் தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.

மொத்த மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்கும் சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் ஒய் ஜி மகேந்திரன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆடுகளம் நரேன் வழக்கமான போலீஸாக வலம் வருகிறார்.

கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு, அறிமுக இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.
ஜீவி படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய பாபுதமிழ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். உளவியலான கற்பனை கதை படிப்படியாகச் சென்று இறுதியில் சில திருப்பங்களை வழங்குகிறது. சற்று கடினமான திரைக்கதை தான். சிக்கலான  இந்த கதையோடு; நம்மை பயணிக்க வைத்து நேர்த்தியான திரைக்கதை மூலம் தெளிவாக புரியும் அளவிற்கு இயக்கி நம்மை ஈர்க்கிறார்.

மொத்தத்தில் தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் நவீன் மற்றும் பிரபு தயாரித்திருக்கும் ‘க்” சிறப்பாக செயல்படுத்தியிருந்தால், இது ஒரு திடமான படமாக இருந்திருக்கும்.