கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி அளித்த ’லைக்கா’ சுபாஷ்கரன்

0
50
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் திரு.கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உள்ளார்.

கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 கோடி அளித்த ’லைக்கா’ சுபாஷ்கரன்

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பொதுமக்களும் தொழிற்துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் தாணு, ’கோகுலம்’ கோபாலன் உள்ளிட்டோர் நிவாரண நிதி வழங்கிய நிலையில், இன்று லைகா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் லைக்கா நிர்வாகிகள் தமிழ்குமரன், நிருதன், கௌரவ் ஆகியோர் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

தமிழில் கவனம் ஈர்த்த ‘கத்தி’, ‘கோலமாவு கோகிலா’, ’வடசென்னை’ ‘செக்க சிவந்த வானம்’, ’தர்பார்’ உள்ளிட்டப் படங்களை லைக்கா நிறுவனம்தான் தயாரித்துள்ளது. மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ படத்தையும், சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தையும் லைக்கா தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ தமிழ் உரிமையையும் லைக்கா நிறுவனம்தான் கைப்பற்றியிருக்கிறது.