கொரோனா பரவல் எதிரொலி… பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு

0
35

கொரோனா பரவல் எதிரொலிபொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஒத்திவைப்பு

கொரானா பரவல் எதிரொலியாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தியுள்ளார் மணிரத்னம்.

கல்கியின் வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ காவியம் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

சுமார் 500கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் 70 சதவீத பணிகள் ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டன. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் மீதமுள்ள ஷூட்டிங்கை மத்திய பிரதேசத்தில் நடத்த படக்குழு முடிவு செய்திருந்தனர். ஆனால் கொரானாவின் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை சென்னை அல்லது ஐதராபாத்திலேயே செட் அமைத்து முடித்துவிடலாம் என்று மணிரத்னம் பிளான் பண்ணி வந்தார்.

தற்போதைய சூழ்நிலையில் எந்த முடிவும் எடுக்கமுடியாத அளவுக்கு கொரானா தொற்று உள்ளது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை அரசு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போதைய சூழ்நிலையில் எதுவும் வேண்டாம். அதனால் உடனடியாக ஷூட்டிங் நிறுத்தவும் சொல்லிவிட்டராம். இதனால் திட்டமிட்டப்படி இந்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.