கொரொனா – தொடரும் திரைத்துறையினர் மரணம் : ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பிரபலம் கோமகன் உயிரிழப்பு!

0
14

கொரொனா – தொடரும் திரைத்துறையினர் மரணம்

‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் பிரபலம் கோமகன் உயிரிழப்பு!

கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரானாவிற்கு, ‘ஆட்டோகிராஃப்’ பட பிரபலம் கோமகன் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கி, நடித்து, தயாரித்திருந்த திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்த படத்தில் இடம்பெற்ற “ஒவ்வொரு பூக்களுமே” பாடல் மூலம் பிரபலம் அடைந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி கோமகன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவர், 2008-ல் தி.மு.க ஆட்சியின்போது அமைக்கப்பட்ட தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய நிர்வாக உறுப்பினராக பணியாற்றியவர். இவர் இசை பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். 2019-ம் ஆண்டு தமிழக அரசின் விருதினை பெற்றார்.

இந்நிலையில், கோமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐ.சி.எப்.பில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாடகர் கோமகன் மறைவுக்கு இயக்குனர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘வார்த்தைகள் இல்லை, மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.